• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொடர்ந்து உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் - அண்ணாமலை

தொடர்ந்து உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் - அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

தொடர்ந்து உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தின் போது மாநில தலைவர்  அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தொடர்ந்து உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தின் போது மாநில தலைவர்  அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர்களுடன் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    விரைவில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் 9 மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் வளர்ச்சி பணிகள் அடுத்த கட்ட திட்டமிடல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் கைப்பற்ற வேண்டும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், வேல் யாத்திரை என தொடர்ச்சியாக ஓய்வின்றி கட்சி பணி செய்தது போல் வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதே வேகத்தோடு உழைக்க வேண்டும் தொடர்ந்து உழைத்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்றும் அண்ணாமலை நிர்வாகிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: