மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து நீக்கம்!

மதன் ரவிச்சந்திரன்

பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

  • Share this:
கே.டி.ராகவன் ஆபாச வீடியோ விவகாரத்தில் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக நடந்து கொண்டதால் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளரான கே.டி.ராகவன் மீதான பாலியல் ரீதியிலான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவைச் சேர்ந்த மதன் ரவிச்சந்திரன், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் கே.டி.ராகவன் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சட்டையின்றி வீட்டில் கேடி ராகவன் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read: தாலிபான்களால் பிரியாணி விலை எகிறப்போகுது – காரணம் இது தான்!

இந்நிலையில் இந்த ஆபாச வீடியோ விவகாரத்தில் மதன் ரவிச்சந்திரன் தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ பத்ரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

Also Read:   அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி அரசின் சலுகைகளை பெற இது தான் ஒரே வழி!

அதே வேளையில் பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: