• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயார்.. தமிழ்நாடு தயாரா? அண்ணாமலை கேள்வி

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயார்.. தமிழ்நாடு தயாரா? அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை

அண்ணாமலை

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயார்.. மாநில அரசு தயாரா? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறும்போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகின்றன. எந்த ஒரு ஆட்சிக்கும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த ஆட்சியில் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மாவட்ட அளவில் நல்ல ஆட்சியாளர்களைப் பொறுப்புகளில் நியமித்துள்ளனர். அதிகாரிகள் திறம்பட வேலை செய்கின்றனர்.

    Also read: முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி குறித்து சட்டப்பேரவையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பாராட்டு!

    தமிழக அரசின் பெட்ரோல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு மக்களுக்கு பயன் அளிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பாஜக தயாராக உள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் இருந்தபோது இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் எனில் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒத்துழைப்பு வேண்டும். ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவரும்போது மாநிலத்துக்கு அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை வரும் 2022 வரையே மத்திய அரசு அளிக்கும். ஏற்கெனவே, தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை, நிதிச்சுமை என்று தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டிக்குக் கீழ் கொண்டுவந்தால் பெட்ரோல் விலை நிச்சயம் குறையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், மாநில அரசுக்கு இதன்மூலம் வருவாய் இழப்பு ஏற்படும். மாநில அரசும், நிதியமைச்சரும் இதற்குத் தயாரா? ஏனெனில், மாநில அரசுதான் இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: