• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மலிவான அரசியல் செய்யாமல் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது...! ரஜினிகாந்துக்கு பாஜக பதில்

மலிவான அரசியல் செய்யாமல் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது...! ரஜினிகாந்துக்கு பாஜக பதில்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லி வன்முறை குறித்து மத்திய அரசை ரஜினிகாந்த் சாடியிருந்த நிலையில், அவருக்கு பாஜக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

    டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக நேற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்வி. மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

    உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வியென்றுதான் அர்த்தம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒடுக்க வேண்டும். ஊடகங்கள் ஒற்றுமையாக இருந்து எது நியாயம் என்பதைக் காட்டவேண்டும்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதனை நான் சொன்னால், நான் பா.ஜ.கவோடு இணைத்து பேசுகிறார்கள். பா.ஜ.கவின் ஊதுகுழல் என்று என்னைக் கூறுவது எனக்கு வேதனை தருகிறது. வன்முறைச் சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே இதனை களைய வேண்டும்’” என்று பேசியிருந்தார்.

    ரஜினியின் இந்த கருத்துக்கு கமல்ஹாசன், திருமாவளவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பாஜக கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது.

    உளவுத்துறை தோல்வி என கூறுவதும் மத்திய அரசை கண்டித்திருப்பதும் ரஜினிகாந்தின் அறியாமை என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். ரஜினி மற்றவர்களைப் பார்த்து மலிவான அரசியலை செய்யாமல் இருப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: