பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து தமிழக
பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21 ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன.
இதுதொடர்பாக அண்ணாமலை கூறும்போது, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட பிரதமர் மோடி விலையை குறைத்து இருக்கிறார். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் உள்ளது. அரசியல் லாபத்திற்காக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல். டீசல் விலையை திமுக அரசு குறைப்பதாகக் கூறியுள்ளது.
72 மணி நேரத்திற்குள் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும் சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும் இல்லை என்றால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் . 72 மணி நேரத்திற்குள் சொன்னத்தை செய்யவில்லை என்றால் கோட்டையை பாஜக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அறிவித்தபடி, தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக இன்று பேரணி நடந்தது.
அதன்படி, அண்ணாமலை தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்கி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக பேரணி தொடங்கியது. அப்போது, பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.