• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் போராட்டம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலை மீதான வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக போராட்டம் நடத்துகிறது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில், பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் முறையே 5 மற்றும் 10 ரூபாயை மத்திய அரசு குறைத்தது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசும் பெட்ரோல், டீசல் விலை மீதான வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.

    கடந்த 16 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வருகிறது. அதன்படி, 19ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது.

    Must Read : ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற காவல்துறை ஆய்வாளர் பூமிநாதன் கொலை : இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

    அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: