மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு - தடையை மீறி பாஜக உண்ணாவிரதப் போராட்டம்

பாஜக போராட்டம்

உண்ணாவிரத போராட்டம் தஞ்சை ஜூபிடர் தியேட்டர் - பனகல் பில்டிங் அருகில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 • Share this:
  மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உண்ணாவிரத அறப்போராட்டம் தஞ்சை ஜூபிடர் தியேட்டர் - பனகல் பில்டிங் அருகில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பபட்டு வருகிறது. இதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், முன்னாள் அகில இந்திய பாஜக செயலாளர் எச்.ராஜா, தமிழ்நாடு சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. எனினும் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
  Published by:Suresh V
  First published: