Home /News /tamil-nadu /

சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

சொத்துவரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

BJP protest : மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ள தமிழக அரசைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகராட்சிககளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநகராட்சிககளில் இன்று காலை 11 மணிக்கு பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சொந்த தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடுகளை வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    எனவே, தமிழக அரசு உடனடியாக சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஆர்ப்பார்ட்டம் நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழு உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன்,எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, துணை தலைவர் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    Must Read : செங்கல்பட்டில் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி.. செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டதா? போலீஸார் விசாரணை

    அதே போன்று செங்கல்பட்டு கரு.நாகராஜன், கோவை சி.பி.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் நாராயணன் திருப்பதி, திருப்பூர் வினோஜ் பி.செல்வம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளும் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Property tax

    அடுத்த செய்தி