தமிழக அரசின் பட்ஜெட்டை கண்டித்து
சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மக்களை முட்டாளாக்குவதற்கே திராவிட மாடல் பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது அண்ணாமலை பேசியதாவது-
தாலிக்கு தங்கம் திட்டம் அற்புதமான திட்டம். அதை உயர் கல்வி திட்டமாக மாற்றியுள்ளனர். முதலில் இருந்த திட்டத்தால் 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ஒரு சவரன் தங்கமும் 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 65 ஆயிரம் வரை கிடைக்கும். பட்டதாரி என்றால் ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலம் 90 ஆயிரம் வரை ஒரு பெண்ணுக்கு கிடைக்கும். இதை ரத்து செய்துள்ளார்கள்.
இதையும் படிங்க - கோயிலில் இருந்து தங்க காசுகள், வாளை திருடிச் சென்ற 3 பேர் கைது
புதிய திட்டத்தின்படி உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 கிடைக்கும் என்கிறார்கள். இதன் மூலம் ரூ. 36 ஆயிரம் மட்டுமே கிடைக்கும்.
இதையும் படிங்க - தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அன்புமணி மீது தொடரப்பட்ட வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் ரத்து
சென்னையில் ஒருபக்கம் பூங்காவை உருவாக்குகிறார்கள். அதேநேரம் குப்பை கிடங்குகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பின்னர் சென்னை மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? தமிழக மக்களை முட்டாளாக்குவதற்கே திராவிட மாடல் பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.