தஞ்சையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை, பாஜக அரசியல் நோக்கத்திற்காக செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மோடியின் ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் குறைந்துள்ளது. பணக்காரர்களின் வருமானம் 39 சதவீதம் உயர்ந்து இருக்கிறது என்று மும்பையில் உள்ள பொருளாதார ஆய்வு மையம் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வு அறிக்கை உலகம் முழுவதும் பவனி வருகிறது. தற்போது, நூல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்துகிறது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. சரியான பொருளாதாரம், தொழில் கொள்கை இல்லாததே இந்த நிலைக்கு காரணம்.
பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேல் புகழை பாடினார்.தற்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகழை பாடுகிறார். குஜராத் மாநிலம் என்றால் மகாத்மா காந்தி தான். ஆனால், அங்கு சர்தார் வல்லபாய் படேல் சிலையை கொண்டு போய் வைத்தனர். எதற்காக என்றால் மகாத்மா காந்தியை குஜராத் மாநிலத்தில் பேசக்கூடாது என்பதற்காக தான். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பட்டேல், நேதாஜி ஆகியோரை விரும்புகிறது. பாஜகவினர் இழிவான அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும்.கடவுள் அவர்களுக்கு அருள்புரிய வேண்டும்.
மோடி அரசாங்கம் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியில் திருத்தம் செய்ய இருக்கிறார்கள். இது மாநிலத்தின் உரிமையில் விழுக்கிற பேரரடி. இந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு காங்கிரஸ் துணை நிற்கும். ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு, கர்நாடகம் எதிர்ப்பது தெரிவிப்பது ஏற்புடையதில்லை. தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசு ஏலம் விடுகிறது.மீனவர்களை கைது செய்கிறார்கள். மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கக்கூடாது.
Also Read: கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ1.64 கோடி மோசடி - கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்
தஞ்சையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை, பாஜக கையில் எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதமாற்றம் செய்ய சொன்னதால் மாணவி தற்போது தற்கொலை செய்ததாக சொல்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவுமே இல்லை என்பதால், மாணவியின் தற்கொலை விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில், மாணவி தற்கொலை விவகாரம் குறித்து, பாஜக உண்ணாவிரதம் செய்வது அரசியல் நோக்கத்திற்காக செய்கிறது. பாஜகவின் கை சுட்டுவிடும்.
Also Read: டிஜே பார்ட்டி.. டான்ஸ் எல்லாம் காரணமில்லை - மாப்பிள்ளை மாறிய விவகாரத்தில் நடந்தது என்ன?
இந்திய ஒருமைப்பாட்டை காண்பிப்பதற்காக தான், குடியரசு தின விழாவில், மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் செல்கிறது. ஆனால், மத்திய அரசு அதனை நிராகரித்து இருக்கிறது. தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வில், சிபிஎஸ்இ மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகிறார்கள். நீட் விவகாரத்தில், காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம்.
Read More : தமிழக அரசு ஊழியர்களுக்கு 14% சதவீத அகவிலைப்படி உயர்வு; அரசாணை வெளியீடு
கோவையில் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை பலவந்தமாக வைக்கிறார்கள். காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,திமுக விடம் அதிக இடங்களை கேட்டு பெறுவோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க, வருகிற ஜனவரி 28 ம்தேதி செயற்குழு கூட்டம் கூடுகிறது. மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார்.
இந்த நிகழ்வில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ,ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.