சிவகங்கையில் காணாமல் போன பா.ஜ.க கொடிக்கம்பம் - போராட்டத்தில் பா.ஜ.கவினர்

போராட்டத்தில் பா.ஜ.க

சிவகங்கை மாவட்டத்தில் பொதுஇடத்தில் வைக்கப்பட்ட பா.ஜ.க கொடிக் கம்பம் காணாமல் போனதைத் தொடர்ந்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலையம் பொது இடத்தில் ஊன்றி வைக்கப்பட்டு இருந்த பா.ஜ.க கொடியோடு கம்பத்தை மட்டும் யாரோ கழற்றி சென்று உள்ளனர். இதனை கேள்விப்பட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த ஒன்றிய தலைவர்கள் சிலம்பரசன், ராஜா பிரதிப் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் காவல் நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.

  இதுகுறித்து கட்சியினர் கூறும்போது பொது இடத்தில் அனைத்து கட்சியினர் கொடியும் உள்ளது. அங்கேயே சில மாதங்கள் முன் கொடி கம்பம் ஏற்றும் போது பிரச்சனை ஆகி உள்ளது. மீண்டும் நேற்று கொடி கம்பத்தை கழற்றி சென்று உள்ளனர். காவல் நிலையம் எதிரேயே கொடி கம்பதை கழற்றிச் சென்று உள்ளனர். இதனைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: