ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக அரசைக் கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்  

திமுக அரசைக் கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம்  

பாஜக

பாஜக

பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி, திமுக அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான, அலுவல் மொழிக் குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகள் குறித்த தகவல்கள் ஊடகங்களில் கசிந்தது. அதில், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஐஐடிகள் உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இருந்ததாகத் தெரிகிறது.

  இதை கண்டித்து திமுகவின் இளைஞர் மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும், அண்மையில் கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி, பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கடலூரில் நடைபெறும் போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Annamalai, BJP, DMK, MK Stalin, Tamil News