ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பால் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு

பால் விலை உயர்வை கண்டித்து பாஜக போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு

ஆவின் பால்

ஆவின் பால்

விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது - அண்ணாமலை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து வரும் 15ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

  ஆவின் நிறுவனம் சார்பில் பச்சை, நீலம், ஆரஞ்சு போன்ற நிறப் பாக்கெட்களில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், பிரீமியம் வகையான ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது. 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை தற்போது 60 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஆவினின் மற்ற பாக்கெட் பால்களின் விலை உயர்த்தப்படவில்லை.

  இந்நிலையில், பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பச்சை குழந்தை முதல் முதியோர் வரை பாமர மகக்ள் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான் பொருளான பால் விலை ஏற்றப்பட்டிருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. விடியலை தருகிறோம் என்று சொல்லிவிட்டு பால் விலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

  மேலும், வரும் 15ம் தேதி 1200 இடங்களில் பால் விலையை உயர்வு, சொத்துவரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Aavin, Annamalai, BJP