தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சி என மாயை பிரசாரம் செய்து வருகிறது என்றும்
அதிமுக தான் உண்மையான எதிர்க்கட்சி, ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து அ
திமுக விலகாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து பொதுக்குழுவில் இடம்பெற உள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஆர் பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசின் ஓராண்டு ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டும் விதமாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் இடம்பெறும் என தெரிவித்தார். பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்க கூடாது. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது மலிவானது என பதிலளித்தார்.
இதையும் படிக்க: ஆதீனங்களுக்குள் அரசியல் பேசுவது சரியில்லை - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
ஆன்லைன் ரம்மி க்கு தமிழக அரசு தடை சட்டம் கொண்டு வருவதற்கு முழு அதிகாரம் இருந்தும் குழு அமைத்திருப்பது தேவையற்ற.து தடை நடவடிக்கையிலிருந்து பின்வாங்கும் நடவடிக்கை என தெரிவித்த ஜெயக்குமார், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சி என மாயை பிரசாரம் செய்து வருகிறது.அதிமுக ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து விலகாது என கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.