ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகம் வரும் ஜெ.பி.நட்டா... கார் வெடிப்பு நடந்த பகுதி கோட்டைமேடு ஈஸ்வரன் கோயிலில் இன்று தரிசனம்!

தமிழகம் வரும் ஜெ.பி.நட்டா... கார் வெடிப்பு நடந்த பகுதி கோட்டைமேடு ஈஸ்வரன் கோயிலில் இன்று தரிசனம்!

ஜேபி நட்டா

ஜேபி நட்டா

கோவை, நீலகிரி தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இன்று காலை விமானம் மூலம் கோவை வரவுள்ளார். சில தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்துக்குள்ளான உக்கடம் பகுதியில் அமைந்துள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தவுள்ளார்.

இதன் பின்னர், நட்சத்திர விடுதியில் மாநில பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களைச் சேர்ந்தவர்களுடன் மதிய உணவு அருந்துகிறார். தொடர்ந்து மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா கலந்துகொள்ளவுள்ளார். இறுதியாக, நல்லிசெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனிக்கு செல்லும் அவர், அப்பகுதியில் உள்ள பாஜக நிர்வாகியின் வீட்டில் தேநீர் அருந்தவுள்ளார்.

ஜெ.பி.நட்டா வருகையையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனையின, நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், கோவை, நீலகிரி தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொள்ளவுள்ள பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு அறிவிக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ஊழல் மற்றும் வன்முறை உள்ளிட்டவை நிறைந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார்.

First published:

Tags: BJP, Coimbatore, JP Nadda