திமுகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் கல் எறியச் சொன்னதே ஸ்டாலின் தான் : கன்னியாகுமரி பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு

திமுகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் கல் எறியச் சொன்னதே ஸ்டாலின் தான் : கன்னியாகுமரி பொங்கல் விழாவில் குஷ்பு பேச்சு

குஷ்பு

திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசுகிறார், நான் அவருக்குச் சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் முஸ்லிம் மதத்துக்கு எதிராக குரல் கொடுத்துப் பாருங்கள்.

 • Last Updated :
 • Share this:
  தான் திமுகவில் இருந்த போது தன் வீட்டில் சிலர் கல் எறிந்தனர் என்றும் எறியச் சொன்னதே ஸ்டாலின் தான் என்றும் குஷ்பு பேசியுள்ளார்.

  கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பாஜக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. அப்போது குஷ்பு பேசும்போது, “காங்கிரசில் குடும்ப அரசியல் உள்ளது, இவர்களும் செயல்பட மாட்டார்கள், மற்றவர்களையும் செயல்பட விட மாட்டார்கள்.

  தீபாவளி, பொங்கல் பண்டிகையை நாம் குடும்பத்துடன் கொண்டாடுவோம். முஸ்லிம் பெண்ணான நான் பொட்டு வைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். மதம் பெரிது கிடையாது, ஆனால் ஒரு மதத்துக்கு எதிராகப் பேசுவதுதான் தவறு.

  திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசுகிறார், நான் அவருக்குச் சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால் முஸ்லிம் மதத்துக்கு எதிராக குரல் கொடுத்துப் பாருங்கள். பாஜக சிறுபான்மை மதத்துக்கு எதிரானது அல்ல. 2019-ல் பாஜகவுக்கு சிறுபான்மையினரும் வாக்களித்தனர்.

  திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நான் திமுகவில் இருந்த போது என் வீட்டில் கல் எறிந்தனர். பதறிப்போய் ஸ்டாலினைப் பார்க்கப் போனேன். அவரைப் பார்க்க முடியவில்லை, கல் வீசச் சொன்னதே ஸ்டாலின் தான் என்று தெரிய வந்தது. நான் பாஜகவுக்கு வந்ததால் பாதுகாப்பாக இருக்கிறேன்” என்று பேசினார்.

  இந்த விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.
  Published by:Muthukumar
  First published: