• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exclusive தமிழகத்தில் மீண்டும் யாத்திரையை தொடங்க உள்ள பாஜக!

Exclusive தமிழகத்தில் மீண்டும் யாத்திரையை தொடங்க உள்ள பாஜக!

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழகத்தில் வேல் யாத்திரையை நடத்தியதன் மூலம் கணிசமான வளர்ச்சியை பெற்ற பாஜக தற்போது மீண்டும் ஒரு யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை குறிவைத்து  பாஜக  சார்பில் 3 நாட்களுக்கு  யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை கடந்த மாதம் 16ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.அதன் பிறகு இரண்டு முறை போராட்டத்தை நடத்தியுள்ளார்.  திமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதேபோல் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக பாஜக சார்பில் பிரமாண்ட யாத்திரையை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
யாத்திரைக்கு ஆசிர்வாத் யாத்ரா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக எந்தெந்த பகுதியில் எந்தெந்த தலைவர்களின் தலைமையில் யாத்திரை நடைபெற உள்ளது என்பது போன்ற தகவலை தமிழக பாஜக வெளியிடும் எனவும் கூறப்பட்டுள்ளது . இம்மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் நாமக்கல், கோவை, திருப்பூர் ஆகிய கொங்கு மண்டல பகுதிகளில் இந்த யாத்திரையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 மேலும் படிக்க: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்த அன்புமணி ராமதாஸ்


இந்த நிலையில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று  டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அண்ணாமலை வாழ்த்து பெறுகிறார் .

அதோடு மட்டுமின்றி தமிழகத்தில் பாஜக  செயல்பாடுகள் குறித்தும் வரும் காலங்களில் பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னர் மூன்று நாள் பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகிறார் .

இதையும் படிங்க: உயர்சாதி இளைஞர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம உதவியாளர் -   கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!


பின்னர் தமிழகத்தில் நடைபெற உள்ள பாஜகவின் ஆசிர்வாத்  யாத்ரா குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் வேல் யாத்திரை நடத்துவதற்கு கடந்த அதிமுக தலைமையிலான தமிழக அரசு அனுமதிக்கவில்லை. எனினும் தடையை மீறி பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றது.
இந்த நிலையில் கொரோனா தொற்று இதுவரை முடியாத காலத்தில் மீண்டும் மற்றொரு யாத்திரையை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: