ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக பிரமுகர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 8 தனிப்படை அமைத்து போலீசார் ராஜேந்திர பாலாஜியை தேடி வந்தனர்.
கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று கைது செய்யப்பட்டார்.
ராஜேந்திர பாலாஜியுடன் சேர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.இதில், ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காவி வேட்டி, டி-சர்ட்டில் சென்ற ராஜேந்திர பாலாஜி, நடுரோட்டில் வைத்து கைது!
ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரியில் தலைமறைவாக இருந்ததாகவும் அவரை கர்நாடக மாநிலத்தின் ஹசன் பகுதிக்கு அழைத்து சென்றது ராமகிருஷ்ணன் தான் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ராமகிருஷ்ணன் அடைக்கலம் வழங்கியுள்ளார். அவருடன் சேர்ந்து ராமகிருஷ்ணனின் உறவினர் நாகேஷ், விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு இரவில் ஒரு இடத்தில்தான் ராஜேந்திர பாலாஜி தங்கியுள்ளார். தினமும் அவர் பயணத்திலேயே இருந்துள்ளார். மேலும் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு இரண்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதவியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு... பஸ் போக்குவரத்து இருக்குமா..?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, BJP, Rajendra balaji