சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ அப்போதே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கூறியிருந்தேன். திமுக-வின் அசுர பணம் பலம், படைபலத்தை எதிர்க்க வேண்டும் என்றால் ஒரு வேட்பாளர் நிறுத்த வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கூறினோம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவித்த நாளன்றே அண்ணன் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரிடம் தேர்தலில் பாஜக நிற்கப்போவதில்லை என தெளிவாக கூறிவிட்டோம். அதிமுக உட்கட்சி பிரச்னையை சரிசெய்து வேட்பாளர் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இன்று நல்ல முடிவு வரும் என்பது எங்களின் நம்பிக்கை.
அதிமுக உட்கட்சி பிரச்னையை அவர்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். இது அவர்களுடைய பிரச்னை தொண்டர்கள் தலைவர்கள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் இல்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு என்பது இதுபோன்ற தனித்தனியாக நின்றால் வெற்றி வாய்ப்பு என்பது குறைவாகத்தான் இருக்கும். அதனால் ஒரு வேட்பாளர் உறுதியான வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என தெளிவாக இருக்கோம் எங்களின் முழு ஆதரவு இருக்கிறது. அதனை அண்ணன் இபிஎஸ் -ஓபிஎஸ் இருவரிடமும் தெளிவாக கூறிவிட்டு வந்துவிட்டோம்.
Also Read: இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு தர கோரிக்கை வைத்தோம்.. அண்ணாமலை
கடந்த 8 நாட்களாக என்ன பேசினோம் என அந்தந்த தலைவர்களுக்கு தெரியும். ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக கூறிவிட்டோம். அதேபோல் நம்முடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள், கூட்டணியில் என்ன பேசினோம் என தெரியாமல் சமூகவலைத்தளத்தில் ஏதாவது ஒரு கருத்தை பட்டென போட்டுவிடுகிறார்கள். அதை தவிர்க்கவேண்டும்.
2024 நமக்கு முக்கியமான வருடம். நாடாளுமன்றத்திற்கு நம்முடைய கூட்டணி எம்.பிகளை அதிக அளவில் சென்று அமரவைக்க வேண்டும். அதன்காரணமாகதான் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் இதனை மீண்டும் தெளிவுப்படுத்துகிறேன்.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Annamalai, BJP, Edappadi Palanisami, O Panneerselvam