தற்கொலையை வைத்து திமுக அரசியல் செய்கிறது - ஹெச்.ராஜா

தற்கொலையை வைத்து திமுக அரசியல் செய்கிறது - ஹெச்.ராஜா

பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா.

நீட் தேர்வைக் கண்டு ஓரிருவர் தற்கொலை செய்துகொள்வது துரதிர்ஷ்மானது என்றும் கருத்து கூறியுள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் நடைபெறும் தற்கொலைகளை வைத்து திமுக அரசியில் செய்வது அநாகீரிகத்தின் உச்சக்கட்டம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வைக் கண்டு ஓரிருவர் தற்கொலை செய்துகொள்வது துரதிர்ஷ்மானது. உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், பிணத்தை வைத்து திமுக அரசியல் செய்வது அநாகரிகத்தின் உச்சம் என காட்டமாக விமர்சித்தார்.Also read: பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் வயிற்றில் ஈரத்துணி அணிந்து தொழிலாளர்கள் நூதன போராட்டம்

ஸ்டாலின் போராட்டம் நடத்த வேண்டியது என்றால் நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடிய நளினி சிதம்பரத்தின் வீட்டின் முன்பாகத்தான் என்று கூறிய அவர், ”எத்தனை பேர் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் காதலிப்பது குற்றம், காதல் செய்வதாகச் சொல்பவர்கள் தண்டனைக்குரியவர்கள், அதற்கு சட்டம் கொண்டுவர வேண்டுமென்று ஸ்டாலின் பேசுவரா எனக் கேள்வி எழுப்பினார்.
Published by:Rizwan
First published: