ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆலோசனை

அரசியல் நிலவரங்களைத் தெரிந்துகொள்ள தமிழகத்திற்கு வருகைபுரிந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆலோசனை
அரசியல் நிலவரங்களைத் தெரிந்துகொள்ள தமிழகத்திற்கு வருகைபுரிந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
  • Share this:
அரசியல் நிலவரங்களைத் தெரிந்துகொள்ள தமிழகத்திற்கு வருகைபுரிந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி இங்கு 2 நாட்கள் முகாமிட்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். அதன் அடிப்படையில் 234 தொகுதிகளிலும் பாஜகவை வலுப்படுத்துவதற்குத் தேவையான உத்திகளை பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார்.

குறிப்பாக அதிமுக கூட்டணியில் 60 இடங்களைப் பெற்றே தீரவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள் என்று கூட்டத்தில் பேசியுள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு நேரில் சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.Also read: எனக்கு இப்போது பணத்தேவை உள்ளது: ஆட்சியர் பெயரில் வந்த போலி மெயிலால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்


அப்போது நடைபெற்ற ஆலோசனையில், தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணி இந்தத் தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியையும் ஆலோசித்துள்ளனர். பாஜகவின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading