Home /News /tamil-nadu /

போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி...பாஜக எம்பி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி...பாஜக எம்பி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

பாஜக எம்.பி., சத்திய நாராயணா சவுத்ரி

பாஜக எம்.பி., சத்திய நாராயணா சவுத்ரி

போலி நிறுவனங்கள் பெயரில் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட பாஜக எம்.பி., சத்திய நாராயணா சவுத்ரி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சத்திய நாராயணா சவுத்ரி என்கின்ற ஒய்.எஸ்.சவுத்ரி. இவர் தற்போது பா.ஜ.க.,வில் எம்.பி.,யாக உள்ளார். இவர் கடந்த 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சராக பதவி வகித்தார். இவர் தனது பதவி காலத்தில் பல்வேறு வங்கிகளில் முறைகேடாக கடன் பெற்று ஏமாற்றியதாக அடுக்கடுக்கான புகார் எழுந்தது.

சுமார் 120க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சுஜானா குரூப் என்ற பெயரில் போலியாக துவங்கி சுமார் 6000 கோடி ரூபாய் அளவிற்கு முறைக்கேடு செய்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதனையடுத்து கடந்த 2018 ம் ஆண்டு இவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. வங்கி கூட்டமைப்பிலிருந்து சுமார் 364 கோடி அளவிற்கு சுஜானா நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்று ஏமாற்றியது தொடர்பாக பல ஆவணங்கள் சிக்கியது. இது தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Also read... டெண்டர் முறைகேடு: எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை - உயர் நீதிமன்றம்

மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா. தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிறுவனம் என்ற பெயரில் விளம்பர பலகை மட்டுமே வைத்து மோசடியில் ஈடுப்பட்டது அம்பலமானது. இதன் அடிப்படையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஒய்.எஸ். சவுத்ரி இன்று ஆஜரானார். வழக்கு விசாரணை செய்த நீதிபதி வருகின்ற 26 ஆம் தேதி மீண்டும் ஆதரவாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BJP, Crime News

அடுத்த செய்தி