Home /News /tamil-nadu /

இந்து தீவிரவாதம் பற்றி பேச்சு! கமல்ஹாசனுக்கு தடைகோரி தேர்தல் ஆணையத்தை நாடிய பா.ஜ.க

இந்து தீவிரவாதம் பற்றி பேச்சு! கமல்ஹாசனுக்கு தடைகோரி தேர்தல் ஆணையத்தை நாடிய பா.ஜ.க

கமல் ஹாசன் (மாதிரிப் படம்)

கமல் ஹாசன் (மாதிரிப் படம்)

கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கைவைத்திருந்தார்.

  • News18
  • Last Updated :
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வதற்கு ஐந்து நாள்கள் தடை விதிக்கவேண்டும் என்று பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நேற்று கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து... கமல் பேச்சு... தமிழிசை கண்டனம்

    அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பு கிளம்பிவருகிறது. கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கைவைத்திருந்தார். இந்தநிலையில், பா.ஜ.கவை வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில், ‘கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ஐந்து நாள்கள் தடை விதிக்கவேண்டும்’என்று குறிப்பிட்டுள்ளார்.




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Election Commission, Kamal hassan

    அடுத்த செய்தி