Home /News /tamil-nadu /

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பா.ம.க எம்.எல்.ஏக்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பா.ம.க எம்.எல்.ஏக்கள்

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய சம்பவம் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய சம்பவம் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய சம்பவம் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் தொடர்ந்து பாமக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், அந்த கட்சியின் சேலம் மாவட்ட  எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை பாராட்டி இருப்பது அரசியலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திராவிட கட்சிகளை தமிழகத்திலிருந்து விரட்டாமல் ஓயமாட்டோம். என பேசிவந்த பாமக இறுதியில் அதிமுக என்ற திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த கையோடு கிராமப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என கூட்டணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது பாமக. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் இந்த முடிவு என்றும், அதே நேரத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடர்கிறோம் என்றும் பாமக தனது முடிவை மாற்றி அறிவித்தது.

நடந்து முடிந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு பாமக வெற்றி முடியாமல் போனதால் தங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தொடர் தோல்வி காரணமாக அக் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் மேடை தோறும் தனது கட்சி நிர்வாகிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதை காணமுடிகிறது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை தந்தார். அதில் சேலத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பை அவர் நெகிழ்ச்சியுற பேசியுள்ளார். அதே நேரத்தில் அதில் பாமகவை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் பாமக மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக எல்எல்ஏ அருள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் குறைகளை எழுதி அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடையாக முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது என்று அவர் முதலமைச்சரையும் திமுக ஆட்சியையும் பாராட்டினார்.

இதே போல் மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கூறுகையில், கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கைவிடாமல், தாயுள்ளத்தோடு மிக சிறப்பாக நிறைவேற்றி சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று உள்ளதாகவும், அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சிக்கும் பாகுபாடின்றியும் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினர்.

பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக. 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமே தி.மு.க வெற்றி பெற்றுள்ள நிலையில், சேலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சரை பாமக எம்எல்ஏக்கள் பாராட்டியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Also read: நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் விளக்கம்
Published by:Esakki Raja
First published:

Tags: MKStalin

அடுத்த செய்தி