சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தொழில்துறை மீதான விவாதம் நடைபெற்றது, விவாதத்தில் பா.ஜ.க., சார்பில் வானதி சீனிவாசன் பேசினார், அப்போது மானிய கோரிக்கை தொடர்பாக இல்லாமல் பொது விவகாரம் பலவற்றை குறுப்பிட்டு பேசினார், அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இன்று தாக்கல் செய்த மானிய கோரிக்கை தொடர்பாக மட்டும் பேசவேண்டும் என குறுப்பிட்டார்.
மேலும் தங்களுக்கு ஒதுக்கிய நேரத்தை விட கூடுதலாக நேரம் எடுத்து பேசிவருகிறீர்கள் விரைந்து பேசி முடியுங்கள் என்றார். இதை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன் சபாநாயகர் அப்பாவு, சித்திரகுப்தன் போல் செயல்பட வேண்டும், அவர் அவர் பேசும் நேரத்தை அவர் அவர் கணக்கில் வைக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் அளித்த நேரத்தை என் கணக்கில் சேர்க்க கூடாது என்று கூறினார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது..
அப்போது குறுக்கிட்ட நிதித்துறை அமைச்சர் தியாகராஜன், கடந்த ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏக்கள் பேசும் போது அமைச்சர்கள் குறுக்கிட்டால் அவர்கள் பேச எடுத்துக்கொள்ளும் நேரமும் உறுப்பினர் பேசும் நேரத்தில் தான் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்றும், தனி ஒரு உறுப்பினர்க்காக விதியை மாற்ற முடியாது என கூறினார்.
Also Read : ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு
இதை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆட்சி போல் இல்லாமால் ஜனநாகப்படி பேரவையை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் தான் அவை நடத்தப்பட்டு வருவதாகவும், அதனால் தான் தங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.