தமிழக சட்டசபையில் ஜெய்ஹிந்த் வார்த்தைக்கு இடமில்லையா - பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி

வானதி சீனிவாசன்

தமிழக சட்டசபையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு இடமில்லையா என்று வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை எடுத்ததை பாராட்டுகிறார் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன். சட்டசபையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இடம் கிடையாதா? என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘சட்டமன்றக் கூட்டத்தில் மிகவும் எதிர்பாரத்த டாஸ்மாக் கடை குறைப்பு ஒரு வார்த்தை கூட இல்லை. கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆளுநர் உரையில் இல்லை. இதுபற்றி எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கின்றது.

  பொறுப்பான அரசாக இந்த அரசை பார்க்கின்றோம். பல்வேறு திட்ட பணிகளும், வேகமாக நடைபெற வேண்டிய காலம். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கின்றது. வேறு சித்தாந்த பின்னணியில் வந்தாலும் மத்திய அரசுடன் இணைந்து வளர்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும். வெள்ளை அறிக்கை கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகக்கூடாது. ஜெய்ஹிந்த் வார்த்தையை எடுத்ததை பாராட்டி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசி இருக்கின்றார்.

  ஈஸ்வரன் பேசியதை எல்லாரும் பார்த்து கொண்டு இருந்தோம். தமிழக சட்டசபை ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு எதிராக செயல்படும் என்றால் சுதந்திரபோராட்டத் தியாகிகளுக்கு சட்டமன்றம் என்ன பதில் சொல்லப் போகிறது. நயினார் நகேந்திரன் பேசும்போதும் நிறைய குறுக்கீடுகள் இருந்தன. எங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கும் சட்டமன்றத்தில் இடம் வேண்டும்.

  சட்டமன்றத்திற்கு நான் புதிது என்பதால் உடனடியாக இதை புரிந்து எதிர்வினையாற்றவில்லை. உடனடியாக கட்சி தலைவர்களிடம் பேசிய பின்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசுடன் இணக்கமாக செல்லாதவர்களை, மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இருப்பவர்களை தான் தமிழக அரசு குழுவில் நியமித்து கொள்ளும் என்றால் தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து தான் செயல்பட வேண்டும். இணைந்து செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கிஷோர் கே.சாமி மீது குண்டர் சட்டம் குறித்த கேள்விக்கு, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது. பிரதமரை பற்றி தி.மு.க முக்கிய பிரமுகர்கள் தரம் தாழ்ந்து பதிவிட்டுள்ளனர். பழைய பதிவுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அந்தப் பதிவுகளுக்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் சரியான கருத்து சுதந்திரமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: