Home /News /tamil-nadu /

பெண்கள் கையில் இருக்கும் காசு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும், அதே ஆண்கள் கையில் இருந்தால் - வானதி ஸ்ரீனிவாசன் பேச்சால் சலசலப்பு

பெண்கள் கையில் இருக்கும் காசு குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும், அதே ஆண்கள் கையில் இருந்தால் - வானதி ஸ்ரீனிவாசன் பேச்சால் சலசலப்பு

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan | சட்டப்பேரவையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து வானதி ஸ்ரீனிவாசன் பேசினார்.

    பெண்கள் கையில் காசு இருந்தால் அது குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும், ஆண்கள் கையில் காசு இருந்தால் அது சிகிரெட், டாஸ்மாக் ஆகியவற்றிகுதான் செல்லும் என வானதி சீனிவாசன் பேசியதால் கேள்வி நேரத்தில் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

    தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வது குறித்து பேசினார். அப்போது பெண்கள் கையில் காசு இருந்தால் அது குடும்பத்தின் வளர்ச்சிக்கும் குழந்தைகளின் கல்விக்கும் உதவும் என்றும், அதே நேரம் ஆண்களின் கையில் இருக்கும் பணம் பீடி, சிகிரெட், டாஸ்மார்க் ஆகிய இடங்களுக்குதான் செல்லும் என்று குறிப்பிட்டு பேசினார்,

    இதையடுத்து அவையில் உள்ள பெரும்பாலான திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், எல்லா ஆண்களையும் நான் குறிப்பிடவில்லை ஒரு சிலர் அவ்வாறு இருப்பதாக பேச்சை மாற்றினார், அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ஆன்லைன் விற்பனை குறித்து மட்டும் பேசுங்க மா என்றார். இதையடுத்து பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

    Also Read : உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து - காரணம் என்ன?

    இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் தேரோடும் வீதிகளில் உள்ள மின் வழித்தடங்கள் புதைவடம் மின்வழித் தடமாக மாற்றப்படும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேரவையில் தெரிவித்தார். தேரோட்டம் நடைபெறும் திருக்கோவில் தேர் வீதிகளில் மின் வழித்தடங்கள் புதை வடம் வாயிலாக கொண்டு செல்லப்படும் என்றும் இந்த ஆண்டு திருவாரூர் உள்ளிட்ட மூன்று திருக்கோவில் தேரோடும் வீதிகளில் மின் வழித்தடம் புதை வடமாக மற்ற நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறுவதாகவும் , வரும் காலங்களில் கோவில் தேர் வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதை வடங்களாக மாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: BJP, TN Assembly, Vanathi srinivasan

    அடுத்த செய்தி