மேற்கு வங்கத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கைது

வானதி ஸ்ரீனிவாசன்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 • Share this:
  மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இடையே நேரடிப் போட்டி நடைபெற்றது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜ.க 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடியும் பா.ஜ.கவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

  மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்கும்போது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கார் தெரிவிக்கும் அளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்தது. அதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் பா.ஜ.க சார்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கண்டித்து கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவும், மகளிர் அணி தேசியத் தலைவருமான வானதி ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டார்.

  அதனையடுத்து, போராட்டத்தில் கலந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க எம்.பி ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் அக்னிமித்ரா உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: