கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு ஆலம்பாடி ஸ்ரீகிருஷ்ண வித்யாலய பள்ளியில் கம்பியூட்டர் ஆய்வகம் திறப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் மரம் நடுதல் ஆகிய நிகழ்வுகளை துவங்கி வைக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்து ஆலயங்கள், இந்து கடவுளை வணங்காதவர்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து தி.மு.க அரசு அறநிலையத் துறை மூலம் கோயில்களில் நிகழ்சிகளை துவங்கி வைப்பது உட்பட பல செயல்களை செயல்படுத்தி வருகிறது. இது வருந்தத்தகுந்த செயலாக உள்ளது. இப்படிபட்ட நிகழ்வுகள் நடக்காமல் பார்த்து கொள்ள பாஜக கேட்டு கொள்கிறது.
இந்து ஆலய நிகழ்ச்சிகளில் இந்து நம்பிக்கை, இறைநம்பிக்கை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். அமைச்சர்கள் வந்துதான் கோயில் நிகழ்சிகளைத் துவங்க வேண்டும் என்றால் இந்து அமைச்சர்களை அனுப்பினால் பாஜக வரவேற்கும். அதற்கு அறநிலைய துறை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிக இந்து அமைச்சர்கள் உள்ளனர்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.