சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் கோஷம் எழுப்ப தேவையில்லை - எல்.முருகன் கருத்தில் முரண்படும் பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

சட்டப்பேரவையில் ஜெய்ஹிந்த் கோஷம் எழுப்பத் தேவையில்லை என்று பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மெல்லிசை மேடை இசை கலைஞர்களுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏவும், துணைத் தலைவருமான நயினார் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘மெல்லிசை மேடை இசை கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். சட்டமன்றத்தில் அதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைப்பேன். இதுவரை மத்திய அரசு என்று சொல்லிவிட்டு தற்போது ஒன்றிய அரசு என்று சொல்லுவதில் சொல்லில் குற்றமில்லை அவர்களின் பொருளில் குற்றம் உள்ளது.

  நீட் தேர்வு விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை வேடம் போடவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரம் தற்போதைக்கு முடியக்கூடிய விவகாரம் இல்லை. நீட் தேர்வு சம்பந்தப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்விற்கு தற்போது விலக்கு கிடைக்காது என்பது தெரிந்தும் திமுக அரசு இப்படி சொல்லி வருவது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தும்ஜெய்ஹிந்த் என்பது நமது நாடு நமது தேசம் அதன் மீதுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது. ஜெய்ஹிந்த் என்றால் தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்பது பொருள்.

  தனது தாய் நாடு வெற்றி பெற வேண்டும் என்று சொல்வதில் அவருக்கு தயக்கம் என்று சொன்னால் அவர்கள் எந்த நாட்டில் சென்று வாழப் போகிறார்கள். ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை சட்டமன்றத்தில் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை’ என்று தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக, எம்.எல்.ஏ கொங்கு ஈஸ்வரனின் ஜெய்ஹிந்த் தொடர்பான கருத்து சர்ச்சையான நிலையில், நேற்று சட்டப்பேரவையில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஜெய்ஹிந்த், பாரத் மாதா கி ஜே என்ற எழுப்புவார்கள் என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். ஆனால், அவருடைய கருத்துக்கு முரண்பாடாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: