முதல்வரும் நானும் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் போன்று நண்பர்கள் - நயினார் நாகேந்திரன்

மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்

மே 7-ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் சூரியன் உச்சம் பெற்ற நேரத்தில்தான் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றதாகவும் ஆரூடம் கூறினார்.

  • Share this:
    முதலமைச்சரும் நானும் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் போன்று நண்பர்கள் என்று சட்டசபையில் உரையாற்றிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நகைச்சுவையாக தெரிவித்தார்.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையை தொடங்கும் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மகாபாரதத்தில் சகாதேவனிடம் போரில் வெற்றி பெறுவதற்காக துரியோதனன் நல்ல நாள் குறித்து கேட்டதாகவும் அப்போது அமாவாசையில் களபலி கொடுத்து போரை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என சகாதேவன் துரியோதனனிடம் கூறியதாக தெரிவித்தார்

    Also Read : நீட் தேர்வு விலக்கிற்கு குரல் கொடுக்க தயார் - பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன்

    தொடர்ந்து பேசிய அவர், 15.3.21ம் தேதியில் மிதுன லக்னத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் அதேபோன்று மே 7-ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் மிதுன லக்னத்தில் சூரியன் உச்சம் பெற்ற நேரத்தில்தான் அவர் முதலமைச்சராக பதவி ஏற்றதாகவும் ஆரூடம் கூறினார்.

    அதேபோன்று அமாவாசை தினத்தன்று தான் பேரவையின் முதல் கூட்டமும் தொடங்கியதாகவும் ஜோசியம் கூறினார். தொடர்ந்து சபாநாயகர் உரை முடிக்கும்படி கூற கூறிய நிலையில் முதலமைச்சரும் நானும் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் போன்ற நண்பர்கள் தான் எனவும் தனக்கு பேச வாய்ப்பு கொடுப்பதால் பிரச்சினை ஏதும் வராதென தெரிவித்தார்.

    Also Read : தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? ஸ்டாலின் என்ன ஊராட்சி முதல்வரா? எல்.முருகன் தாக்கு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: