NEET Exam : நீட் தேர்வு விலக்கிற்கு குரல் கொடுக்க தயார் - பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன்

மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்

சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம்...

  • Share this:
    நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு தமிழக பாஜக குரல் கொடுக்குமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் கேள்வி எழுப்பினார். அப்போது, சட்டத்திற்கு உட்பட்டு நீட் விலக்கிற்கு குரல் கொடுக்க தயார் என பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

    தமிழக சட்டமன்றத்தல் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்தின், நீட் தேர்வுக்கு ஒரு புறம் தயாராக சொல்லும் அரசு மறுபுறும் விலக்கு கேட்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பேறவேண்டும் என்பது தான் திமுக, அதிமுகவின் நிலைப்பாடாகவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதே போல அமைச்சரவையிலும் முடிவு செய்திருக்கிறார்கள் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்ப வில்லை எனவும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் போது அதற்கு பாஜக குரல் கொடுக்க தயாரா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.

    இந்நிலையில், எந்த மாவட்டத்தையும் புறக்கணிக்கவில்லை என்றும், வாக்களிக்காதவர்களும் வருத்தப்படும் அளவிற்கு தங்களின் செயல்பாடு இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தா். எல்லாருக்குமான அரசு என்று கூறி கோவை மாவட்டம் மட்டும் புறக்கணிக்கப் படுவதாகவும், கோவை மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் வென்றதால் புறக்கணிக்கபடுகிறதா என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை புறக்கப்படவில்லை என்றும் கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வாக்களித்தவர்கள் பெருமைபடவேண்டும், வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு செயல்படவேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், எல்லா மாவட்டங்களையும் ஒரே மாதிரியே பார்ப்பதாகவும், கோவை புறக்கணிக்கப்படவில்லை என்று முதலைச்சர் விளக்கம் அளித்தார்.

    Must Read : ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பாஜக நயினார் நாகேந்திரன் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்

    அவரை தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் 110 விதியின் வாயிலாக அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் , மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    தமிழகத்தின் மான்சென்ஸ்டராக இருக்கும் கோவையில் இந்த திட்டம் செயல்படுத்தினால் மக்கள் அதிகளவு பயன்பெறுவதோடு, தமிழக வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கோவைக்கு எய்ம்ஸ் கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published: