கொங்கு நாட்டுக்கான விதை போடப்பட்டதா?: பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சூடான பதில்!

நயினார் நாகேந்திரன்

ஏற்கனவே ஒன்றிய அரசு என தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே குறுகிய கன்னோட்டத்தோடு போய்க்கொண்டிருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

 • Share this:
  கொங்குநாடு தமிழ்நாட்டில் தான் உள்ளது, அதற்கான விதை போடப்படவில்லை என பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

  சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மற்றும் வருவாய் அலுவலர் பெருமாள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  பின்னர் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவருமான நயினார் நாகேந்திரனிடம் ‘கொங்குநாடு’ விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. இதற்கு பதிலளித்த நயிநார் நாகேந்திரன், “நம்ம ஊரு பக்கத்தில் வல்லநாடு இருக்கிறது. தேனி பக்கத்தில் வருஷநாடு இருக்கிறது, மணப்பாறை அருகே வளநாடு இருக்கிறது.. அதெல்லாம் மாநிலமாக பிரிக்கலாமா? எதற்கு அவங்களுக்கு பயம், பயமே தேவையில்லை எல்லாம் தமிழ்நாடு தான். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  Also Read: மணமேடையில் இருக்க வேண்டிய மகனை பிணவறையில் படுக்க வைத்த தந்தை.!

  ஆந்திரா இரண்டாக பிரிந்து இருக்கிறது, உத்தரப் பிரதேசம் இரண்டாக பிரிந்து இருக்கிறது.. மாநிலங்களை இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும், நோக்கத்தையும் உணர்த்துகின்றது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதற்கு செய்தியாளர்கள் தற்போது அதற்கான விதை போடப்பட்டு உள்ளதா? எனக் கேட்டதற்கு பதில் கூறிய நயினார் நாகேந்திரன், “ஏன் அப்படி ஒரு சந்தேகம். அப்படி எந்த ஒரு விதையும் போடவே இல்லை, கொங்குநாடு தமிழ்நாட்டில் தான் உள்ளது அது உங்களுக்கு தெரியும் ஏற்கனவே ஒன்றிய அரசு என தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே குறுகிய கன்னோட்டத்தோடு போய்க்கொண்டிருக்கிறது.” என பேசினார்.

  செய்தியாளர் அய்யப்பன், திருநெல்வேலி
  Published by:Arun
  First published: