MR Gandhi : செருப்பு அணியாமல் தமிழக சட்டசபைக்கு வந்து கவனத்தை ஈர்த்த பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி

எம்.ஆர்.காந்தி

பொதுவாக செருப்பு அணியாமல் நடப்பதையே வழக்கமாகக் கொண்டவர். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அவர் செருப்பு அணியாமலேயே சென்றார்.

  • Share this:
    தனது 75ஆவது வயதில் முதல்முறையாக எம்.எல்.ஏ வாக தேர்வானவர் பாஜகவைச் சேர்ந்த எம்.ஆர்.காந்தி. இவர், 1980-ல் இருந்து 7 முறை போட்டியிட்டு முதல்முறையாக தற்போது, நாகர்கோவில் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று, தமிழக சட்டமன்ற உறுப்பினராகி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தவர்.

    இவர், தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், செருப்பு அணியாமல் வருவதால் மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    1980ஆம் ஆண்டு முதல் எம்.ஆர். காந்தி தேர்தலில் போட்டியிட்டு வந்தார். 1980, 1984, 1989, 2006, 2011, 2016, என 6 முறை தேர்தலில் போட்டியிட்ட இவர். இதில் மூன்று முறை நாகர்கோவில் தொகுதியிலும், இரண்டு முறை குளச்சல் தொகுதியிலும், ஒரு முறை கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட்டார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 7-வது முறை போட்டியிட்டு நாகர்கோவில் எம்.எல்.ஏ,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இதுவரை 2 பேர் மட்டுமே பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கின்றனர். ஒருவர் சி. வேலாயுதம், இவர் 1996 தேர்தலில் வெற்றிபெற்றார். மற்றொருவர் எம்.ஆர்.காந்தி, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

    எம்.ஆர்.காந்தி


    இவர், பாஜகவின் தாய் இயக்கமான ஜனசங்கத்தின் மாவட்ட தலைவராக 1967ஆம் ஆண்டே பொறுப்புவகித்தவர் எம்.ஆர்.காந்தி. 1975ல் மிசாவில் ஓராண்டு சிறையில் இருந்தவர். ஜனசங்கம் பாஜக-வாக மாறியபோது 1980 ல் ஒருங்கிணைப்புக்குழுவில் இடம்பெற்றவர். 2001-ல் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக ஆனார்.

    Must Read : கியூபாவின் அப்டாலா தடுப்பூசி 92 சதவீத திறனுள்ளது என அறிவிப்பு

    இந்நிலையில், அம்.ஆர்.காந்தி, செருப்பு அணியாமல் தமிழ சட்டசபைக்கு வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர், பொதுவாக செருப்பு அணியாமல் நடப்பதையே வழக்கமாகக் கொண்டவர். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அவர் செருப்பு அணியாமலேயே சென்றார்.

    இவரின் எளிமை மக்களை கவரும் வகையில் இருப்பதுடன், கட்சி பாகுபாடுகளைக் கடந்து அனைவரும் நேசிக்கும் மனிதராக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவர் திருமணம் செய்து கொள்லாமல் பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: