Home /News /tamil-nadu /

தனித்து போட்டியிட்ட பாஜகவுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? - உள்ளாட்சித் தேர்தல் முடிவு.. ஒரு அலசல்

தனித்து போட்டியிட்ட பாஜகவுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? - உள்ளாட்சித் தேர்தல் முடிவு.. ஒரு அலசல்

Tamilnadu BJP

Tamilnadu BJP

BJP's Electoral Performance | திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தாலும், தனித்து போட்டியிட்ட பாஜக இந்த தேர்தலில் அதிகம் கவனம் பெற்றுள்ளது. 

தமிழகத்தில் பாஜகவின் பலம் என்ன என்பதை மற்ற கட்சிகள் மட்டுமல்ல பாஜகவே அறிந்து கொள்வதற்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழிவகை செய்து கொடுத்துள்ளது.  

தமிழ்நாடு முழுவதும் தனித்து போட்டியிட்ட பாஜக, தமிழகத்தில் கவனிக்கத்தக்க வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 12 இடங்களில் இரண்டாம் இடத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் மூன்றாம் இடத்தையும் பெற்று வலுவான கட்சியாக உருவெடுத்து வருகிறது

தனித்து போட்டியிட்ட பாஜகவின் வளர்ச்சி விவரங்கள்:

பரபரப்பாக நடைபெற்று முடிந்த  பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. மாநகராட்சி பகுதியில் 69 சதவிகித வாக்குகளையும், நகராட்சி பகுதிகளில் 61 சதவிகித வாக்குகளையும் கைப்பற்றி திமுக அபார வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, மாநகராட்சி பகுதிகளில் 11 சதவிகிதமும், நகராட்சி பகுதிகளில் 16 சதவிகித வாக்குகளும் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தாலும், தனித்து போட்டியிட்ட பாஜக இந்த தேர்தலில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

அதிலும் தனித்து போட்டியிட்டு சென்னை மாநகராட்சியில் 134 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  சென்னை மாநகரில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 12 வார்டுகளில் இரண்டாமிடம்
சென்னையில் 111 வார்டுகளில் மூன்றாவது இடத்தை பிடித்தது பாஜக.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - பாஜக பெற்ற வாக்குகள்

பேரூராட்சியில் 230  இடங்களில் வெற்றி (3.02 % வாக்குகள் )
நகராட்சியில் 56 இடங்களில் வெற்றி  (1.46% வாக்குகள் )
மாநகராட்சியில் 22 இடங்களில் வெற்றி  (1.60% வாக்குகள் )

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெற்றிருந்த நிலையில் இடப்பங்கீடு சுமூகமாக அமையாததால் பாஜக தனித்து போட்டியிடுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்த போது பாஜகவின் நிலைப்பாடு பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது  தமிழகத்தில் பாஜகவின் பலம் என்ன என்பதை மற்ற கட்சிகள் மட்டுமல்ல பாஜகவே அறிந்து கொள்வதற்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வழிவகை செய்து கொடுத்துள்ளது.

இருந்தாலும் பெரும்பாலான மக்கள் வாக்களிக்கவில்லை இதனால் 40 சதவீதம் வாக்கு பதிவாகவில்லை. இருக்கக்கூடிய வாக்குகளின் அடிப்படையில் தான் சதவீதங்கள் பகிரப்படுகிறது.  அந்த அடிப்படையில் பார்த்தால் பாஜகவின் வாக்கு சதவீதம் மட்டுமே சற்று அதிகரித்து காணப்படுகிறது.  ஆனால் வாக்குகள் உயர்ந்து உள்ளதா என்பது அடுத்தடுத்த தேர்தலில் தான் கணிக்க முடியும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
Published by:Arun
First published:

Tags: BJP, Local Body Election 2022

அடுத்த செய்தி