Home /News /tamil-nadu /

யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது.. பாஜக தலைவர்கள் கண்டனம்

யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது.. பாஜக தலைவர்கள் கண்டனம்

அண்ணாமலை-கார்த்திக் கோபிநாத்

அண்ணாமலை-கார்த்திக் கோபிநாத்

Karthik Gopinath : கார்த்திக் கோபிநாத் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது கண்டனத்திற்கு உரியது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கண்டனம் தெவித்துள்ளனர்.

    பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான உப கோயிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, இளைய பாரதம் யூடியூப் சேனலை நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த கோயில் படத்தை காண்பித்து, இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அரவிந்த்குமார் போலீசில் புகார் அளித்தார்.

    மேலும், தமிழக அரசுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டது மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் கோயில் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்ததாக, துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன் பேரில் சென்னையில் கார்த்திக் கோபிநாத்துக்கு சொந்தமான ஸ்டூடியோவில் வைத்து, ஆவடி மாநகர காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். கார்த்திக் கோபிநாத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420, 409 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் கைது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தங்களுக்கு எதிராக பேசுவோரை மிரட்டும் உத்தியை தமிழக அரசு வழக்கமாக கொண்டுள்ளது என்று சாடியுள்ளார்.



    கார்த்திக் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது கண்டனத்திற்கு உரியது என்றும், அவருக்கு தமிழக பாஜக துணை நிற்பதுடன், தேவையான சட்ட உதவிகள் வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.

    Must Read : 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை.. கெத்து காட்டிய அத்தைகள் - பிரம்மாண்டமாக நடந்த மஞ்சள் நீராட்டு விழா!

    இதேபோல, கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கோயில் மராமத்து பணி மேற்கொள்ள பொதுமக்களிடம் பணம் வசூலித்ததற்காக, கார்த்திக் கோபிநாத்தை ஆவடி போலீசார் கைது செய்தது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.



    மேலும், இது, அரசியல் சாசனத்தின் 25ஆவது பிரிவை மீறும் செயல் என்பதால் போலீசாருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, Arrested, BJP, Subramanian Swamy

    அடுத்த செய்தி