ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive: ரெய்டுனா அவர்களே பணத்தை வைத்து எடுப்பார்கள்; இதெல்லாம் சகஜம்: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வி.பி துரைசாமி ஆதரவு

Exclusive: ரெய்டுனா அவர்களே பணத்தை வைத்து எடுப்பார்கள்; இதெல்லாம் சகஜம்: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வி.பி துரைசாமி ஆதரவு

வி.பி.துரைசாமி

வி.பி.துரைசாமி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு துணைத் தலைவர் வி பி துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ரெய்டு செல்லும்பொழுது அவர்களே பணத்தை வைத்து அவர்களே எடுப்பார்கள், நாட்டில் இதெல்லாம் நடப்பது தான் என பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அண்ணாமலை, மரியாதை நிமிர்த்தமாக  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது பாஜக துணைத் தலைவர் துரைசாமி, எம் என் ராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு துணைத் தலைவர் வி பி துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Also Read:  மரியாதையே இல்லயா? மணமேடையிலேயே மணமகளை அவமதித்த மணமகன்..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். பின்னர் சந்திப்பு குறித்து துணைத் தலைவர் வி பி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்ட் அரசியல் பழிவாங்கும் செயல். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் 20 லட்ச ரூபாய் கைப்பற்றியது குறித்து பதிலளித்த பாஜக துணைத் தலைவர் வி பி துரைசாமி, ரெய்டு செல்லும்பொழுது அவர்களே பணத்தை வைத்து அவர்களே எடுப்பார்கள். இது நாட்டில் நடக்கும் ஒரு நிகழ்வுதான் எனக் கூறினார்.

Also Read:  ஆன்லைனில் பீர் வாங்க முயன்ற முதியவர் ரூ.58,000ஐ இழந்தது எப்படி?

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாகவும் வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கரூர், சென்னை என அவருக்கு சொந்தமான 21 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: AIADMK, Annamalai, BJP