சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,
மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு தான் வர தயார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள
ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி காலவகாசம் வழங்கினார்.
Also Read : இன்று விண்ணப்பித்தால், நாளை மின் இணைப்பு வழங்கப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
மேலும் எனவே தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள் அதையும் சந்திக்க தயார் என்று திட்டவட்டமாக கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவிப்பை தொடர்ந்து அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
அதில், மின்துறை அமைச்சர் ஆதாரம் கேட்கிறார். அவருக்கான ஒரு சாம்பிள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. பில் அனுமதிக்கு 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று ரூ.29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. பதில் சொல்லுங்கள் என்றுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.