• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுகவை நெருங்குகிறாரா ரஜினி? பாஜக தலைவர் எல்.முருகன் பதில்

அதிமுகவை நெருங்குகிறாரா ரஜினி? பாஜக தலைவர் எல்.முருகன் பதில்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழக அரசை பாராட்டிய ரஜினி, அதிமுகவை நெருங்குகிறாரா? என்பது போகப்போகத்தான் தெரியும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
நியூஸ் 18-க்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசுகையில், கந்தசஷ்டி விவகாரம் தொடர்பாக அதிமுக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பது அவரது அரசியல் வியூகத்தை காட்டுகிறது.

நானும் அரசாங்கத்தை பாராட்டி இருக்கிறேன் ஆனால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

Also read... செமஸ்டர் ரத்து... அரியர்ஸ் பாடங்கள் எப்போ எழுதனும்...? குழப்பங்களுக்கு விடை இங்கே...

தொடர்ந்து பேசிய முருகன், ரஜினி அதிமுகவை நெருங்குகிறாரா? என்பது போகப்போகத்தான் தெரியும். கந்தசஷ்டி விவகாரத்தில் அனைவருமே கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

அதில் முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் அன்றே இதுகுறித்து கருத்து தெரிவிப்பார் என்று நினைத்தேன் ஆனால், அவர் சற்று தாமதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: