ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

BJP : சபதம் நிறைவேறியது... தமிழகத்தில் தாமரை மலர்ந்தது - எல்.முருகன்

BJP : சபதம் நிறைவேறியது... தமிழகத்தில் தாமரை மலர்ந்தது - எல்.முருகன்

 பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்

2021 தேர்தலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது தமிழகத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இது குறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பாஜக மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை பாஜக அரசியல் கட்சி மட்டுமல்ல மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவை செய்கிற அமைப்பும் ஆகும்.

  நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றபோது தெரிவித்த கருத்துக்களை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021ல் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

  1996-ல் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அதன் பிறகு 2001ல் நான்கு சட்டமன்ற உறுப்பினரும் இருந்தார்கள். இப்போது 2021-ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. மூத்த தலைவர் திரு. M.R. காந்தி, பாஜக அகில பாரத மகளிரணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் திரு. நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் திருமதி. டாக்டர். C.சரஸ்வதி, ஆகியோர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும்.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரங்கள் மேற்கொண்ட பாரதபிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கும், அகில பாரத தலைவர் திரு. J.P.நட்டா அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களுக்கும் மத்திய அமைச்சர்கள் திருமதி. நிர்மலா சீத்தாராமன், திரு.ராஜ்நாத்சிங், திருமதி.ஸ்மிருதி ராணி, உள்பட அனைத்து தலைவர்களுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கும், மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  Must Read : தமிழக சட்டமன்றத்தில் இடம்பிடித்த பாஜக... நீண்டகால போராட்டத்தின் வெற்றி!

  சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அதிமுக, பாமக, தமாகா உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பாஜகவின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: BJP, L Murugan, TN Assembly, TN Assembly Election 2021