தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? ஸ்டாலின் என்ன ஊராட்சி முதல்வரா? எல்.முருகன் தாக்கு

மு.க.ஸ்டாலின் - எல்.முருகன்

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கும் முதல்வர் முக ஸ்டாலின் என்ன ஊராட்சிக்கு முதல்வரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

  • Share this:
    மத்திய அரசை ஒன்றிய அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து வருகிறார். ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு தமிழக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சட்டத்தில் உள்ளதை தான் நாங்கள் அழைத்து வருகிறோம் என்று திமுக தரப்பில் பதிலளித்து வருகின்றனர். ஒன்றிய அரசு என்று அழைப்பது பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில் இது குறித்து சட்டசபையிலும் முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறவது ஏன் என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என கோரினார். இதற்கு பதிலளித்த முதல்வர், ஒன்றிய அரசு என கூறுவதை குற்றமாக கருத வேண்டாம், நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதை தான் நாங்கள் சொல்கிறோம்.. சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவையில்லை.. இதை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம்.. இது கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிப்பது என தெரிவித்தார்.

    Also Read : உள்ளாட்சி அமைப்பு தனி அலுவலர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான மசோதா தாக்கல்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஒன்றிய அரசு குறித்து விளக்கமளித்த நிலையில் தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். ஒன்றிய அரசு என்று எந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்கு உள்ளது.

    சட்டத்தில் இல்லதா வார்த்தையை பயன்படுத்துவது அம்பேத்கரை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசு என்று சொல்வதற்கு நாங்கள் ஏன் பதற வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என இல்லாத சொல்லை பயன்படுத்துவது தவறான ஒன்றாகும். தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? ஸ்டாலின் என்ன ஊராட்சி முதல்வரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Also Read : தித்திப்பான உரை...’ மருத்துவ உலகமே முதலமைச்சருக்கு நன்றி கூறுகிறது - சதன் திருமலைக்குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: