அணி மாறுகிறாரா பாரிவேந்தர்? பா.ஜ.க தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு

பாரிவேந்தர் முருகன்

ஜ.ஜே.க கட்சியின் தலைவர் பாரிவேந்தரை திடீரென பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணிகளை வலிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கூட்டணிகள் தற்போதும் தேர்தலைச் சந்திக்கும் சூழல் உள்ளது. ஆனால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மீண்டும் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை பாரிவேந்தர் தலைமையிலான ஐ.ஜே.கே கட்சி தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றது. பெரம்பலூர் நாடளுமன்ற,த் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பாரிவேந்தர் நாடளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள பாரிவேந்தரின் வீட்டில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் திடீரென அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது. இந்த சந்திப்பின் போது பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உடன் இருந்தார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஐஜேகேவை வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக இடம்பெறும் கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியாக இந்த சந்திப்பு இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாஜக நிர்வாகிகளிடம் நாம் பேசும் போது இந்த சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பு என கூறுகின்றனர்.
Published by:Karthick S
First published: