அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திமுக எம்.பி., மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சித்திருந்தார்.
தனது பேச்சு சர்ச்சை ஆன நிலையில், ஆ.ராசா தனது சமூகவலைதளப் பக்கத்தில், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா என்று கேள்வியெழுப்பினார். மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது என்றும் வினவினார். அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்றும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக டிஜிபி அலுவலகத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆ.ராசா அனைவரையும் இழிவுபடுத்திவிட்டார். அவர் மன்னிப்பு கேட்டாலும் போதாது. திமுகவை விட்டு அவரை நீக்க வேண்டும். உடனடியாக அவரை நீக்காவிட்டால் அந்த கருத்து திமுகவின் கருத்து என்றெ எடுத்துக்கொள்ளப்படும், எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A Raja, BJP cadre, Police complaint