ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாடு வருகிறார் ஜேபி நட்டா.. நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை..

தமிழ்நாடு வருகிறார் ஜேபி நட்டா.. நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை..

ஜேபி நட்டா

ஜேபி நட்டா

கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பாகவும் அவர் அறிவுறுத்தல்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

கோவையில் நடைபெற உள்ள பாஜகவின் அமைப்பு ரீதியான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளில், தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பாகவும் அவர் அறிவுறுத்தல்களை வழங்கலாம் என கூறப்படுகிறது.

இதில் ஜே.பி.நட்டா வருகை மற்றும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான பொறுப்பாளர்களாக சி.பி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளராக மாநில பொது செயலாளர் முருகானந்தம் மற்றும் பொறுப்பாளர்களாக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கனக சபாபதி, எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 15 பேரை நியமனம் செய்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

First published:

Tags: BJP, JP Nadda, Tamilnadu