Home /News /tamil-nadu /

சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி; தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகின்றனர் - இல. கணேசன்

சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி; தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகின்றனர் - இல. கணேசன்

இல.கணேசன்

இல.கணேசன்

  • News18
  • Last Updated :
நாடு தழுவிய மொழி சமஸ்கிருதம். ஆனால் தமிழ் மொழியை தமிழர்கள் மட்டுமே பேசுகிறார்கள் என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.


தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 166-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மரியாதை செலுத்தினார்.


பின்னர், தமிழ் வளர்ச்சியை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் சமஸ்கிருதம் நாடு தழுவிய மொழி. தமிழ் தமிழர்களால் மட்டும் பேசப்படும் மொழி எனவே தமிழை காட்டிலும் சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழ் வளர்ச்சிக்காக மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது எனவும் அவர் கூறினார்.


குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு
நீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும், போராட்டங்களை எதிர்கொள்ள தமிழக அரசு குறிப்பாக காவல்துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதனால் மிகப்பெரிய அளவிலான கலவரங்கள் தடுக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது என்று தெரிவித்துள்ளார்.


குடியுரிமை திருத்த சட்டத்தால் ஒரு இந்தியன்  பாதிக்கப்பட்டால் ஒரு கோடி தருவேன் என நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் உண்மை தன்மையை எடுத்துரைப்பதாகவும், தமிழக முதல்வரும் இதை தான் நேற்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


திமுக பதவி ஆசை காரணமாக பொய் குற்றச்சாட்டு கூறுபவர்களை ஆதரித்து வருகின்றனர், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என்றும் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

Also see...




Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BJP, Sanskrit

அடுத்த செய்தி