ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆலய பிரவேசத்தை அமைதியாக நடத்தியவர் முத்துராமலிங்க தேவர் - எச்.ராஜா புகழாரம்!

ஆலய பிரவேசத்தை அமைதியாக நடத்தியவர் முத்துராமலிங்க தேவர் - எச்.ராஜா புகழாரம்!

எச்.ராஜா மரியாதை செலுத்தினார்

எச்.ராஜா மரியாதை செலுத்தினார்

ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர் - எச்.ராஜா ட்விட்டர் பதிவு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பாஜகவின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தேசிய செயல் தலைவருமான எச்.ராஜா அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

  இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்  முத்துராமலிங்க தேவரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜை இன்று நடை பெறுகிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில், மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,   கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் இதில்  மரியாதை செலுத்தினர்.

  இந்நிலையில்,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு எச்.ராஜா ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர்.

  இதையும் வாசிக்க”நம் தேசத்திற்காக தேவர் ஆற்றிய பங்கு தலைசிறந்தது”- பிரதமர் மோடி ட்வீட்

  மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று ஹரிஜன மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன்.

  ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்திய பெரியவர்  பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் தியாகத்தையும் சேவையும் வீரத்தையும் போற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Devar Jayanthi