முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பெட்ரோல் விலை குறைப்பு குறித்து தி.மு.க பேசி முடிவுக்கு வரவேண்டும் - அண்ணாமலை விளக்கம்

பெட்ரோல் விலை குறைப்பு குறித்து தி.மு.க பேசி முடிவுக்கு வரவேண்டும் - அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை

அண்ணாமலை

Petrol price | Annamalai | பெட்ரோல் விலை குறைப்பு குறித்து தி.மு.கவினர் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘பாஜகவிற்கு கோவிலும் முக்கியம், சர்சும் முக்கியம், மசூதியும் முக்கியம். ஆனால் திமுக அரசின் செயல்பாட்டை பார்க்கும் பொழுது ஒரு மதத்திற்கு மட்டும் எதிராக செயல்பாடு இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கண்ணாடி கூண்டில் உள்ளிருந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார். எல்லோருடைய ஆசையும் மாணவர்கள் வேகமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது தான். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் பள்ளிக்கு சென்றால் அது மிக பெரிய பிரச்சனை. அரசினுடைய கோட்பாட்டை நாம் சிந்திக்க வேண்டும். அனைவரையும் பள்ளிக்கு செல்ல வேகமாக அழுத்தம் கொடுக்கக்கூடாது.

தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்பில் சீர்திருத்தம் வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் திமுகவின் பி டீம் ஆக மாறிவிட்டது என்று அனைவருக்கும் தெரியும். அதில் இருந்து தப்பிப்பதற்கு ஏதாவது ஒன்றை குற்றம்சாட்டி விட்டு நாங்கள் தனியாக ஒரு கட்சி நடத்துகிறோம். தனியாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக காங்கிரஸ் இதுபோன்ற செயல்களை அவ்வப்போது செய்கிறது.

பெட்ரோல் விலை 35 ரூபாயாக குறைக்க நடவடிக்கை - பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

 காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் அடித்தளம் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. திமுக என்ன சொல்கிறதோ அதை ஒப்பிப்பது தான் காங்கிரசின் வேலை.

பெட்ரோல் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, திமுகவினர் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒரு எம்பி பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார். ஒரு நிதி அமைச்சர் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது என்று சொல்கிறார். இது குறித்து கேட்டால் கட்சியின் கருத்து வேறு. அரசின் கருத்து வேறு என்கின்றனர். இவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி பெட்ரோல் விலையை பாஜக சொல்வது போல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவார்களா? மாட்டார்களா? என்று சொன்னால் தான் தீர்வு ஏற்படும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai