திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டுள்ளோம் என்று பாஜக தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் குடும்ப திருமணவிழா திருப்பூரில் இன்று நடந்தது.
திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பாஜக தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திருமண நிகழ்ச்சியில் பேசிய, சி.பி ராதாகிருஷ்ணன், “கலைஞருக்கு பிறகு கட்சியின் தலைமையை ஏற்ற தளபதி அவர்கள், எங்களையெல்லாம் தோற்கடித்து இன்று வெற்றி தளபதியாக உள்ளார். நாங்கள் இன்னும் உழைக்க வேண்டியதும், அதனை தளபதி அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகமுள்ளது” என்று அவர் கூறினார்.
தமிழக பாஜகவின் தலைவருக்கான போட்டியில் சி.பி ராதாகிருஷ்ணன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாநில தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், இரண்டு முறை எம்.பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மத்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin