தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார்! பா.ஜ.க தலைவர் புகழாரம்

தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார்! பா.ஜ.க தலைவர் புகழாரம்
பி.டி.அரசகுமார்
  • News18
  • Last Updated: December 1, 2019, 2:40 PM IST
  • Share this:
தமிழகத்தின் அடுத்த முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கும் காலம் வரும் என பா.ஜ.கவின் மாநில துணைத் தலைவர் அரசகுமார் கூறியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் இல்ல திருமண விழாவில் பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ’முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார்.  காலம் கணியும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார்.  தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணையில் ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்க போகிறோம்’ என்று தெரிவித்தார்.


Also see:

First published: December 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்