• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நேற்று ஆர்ப்பாட்டம், இன்று டெல்லி பயணம் - அண்ணாமலையின் அடுத்த மூவ்

நேற்று ஆர்ப்பாட்டம், இன்று டெல்லி பயணம் - அண்ணாமலையின் அடுத்த மூவ்

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழக பாஜகவின் இந்த ஆர்ப்பாட்டம் டெல்லியல் உள்ள தலைவர்கள் வரை பேசப்பட்டுள்ளது.

  • Share this:
    மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் 3 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழக அரசியல் களத்தில் பாஜகவின் செயல்பாடுகள் அதிகம் கவனம் பெற்று வருகின்றன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தப்படியாக மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகாதாது அணைக்கு எதிர்ப்பு, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தனிக்குழு என்று பாஜக அடுத்து காய்களை நகர்த்தி வருகிறது.

    Also Read : தயாநிதி மாறன் பற்றிய எல்லா விஷயங்களும் எங்களுக்குத் தெரியும் - அண்ணாமலை

    காவரி ஆற்றுக்கு குறுக்கே மேகாதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து தமிழக பாஜக சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் தஞ்சாவூர் ஜூபிடர் தியேட்டர் - பனகல் பில்டிங் அருகில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அண்ணாமலை, தற்போது நடைபெறும் போராட்டம் கர்நாடக அரசை ஒட்டு மொத்தமாக எதிர்த்து நடைபெறுகிறது. அரசை மட்டுமல்ல அங்குள்ள காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளையும் எதிர்த்துதான் இந்த போராட்டம். நிச்சயம் அவர்களால் அணை கட்ட முடியாது. சட்டம் அப்படி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளத்துறை அச்சகம் ஆகியவை அணை கட்ட முடியாது என்று கூறியுள்ளது” என்றார்.

    Also Read : உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக வியூகம் - 17 பேர் குழு அறிவிப்பு

    தமிழக பாஜகவின் இந்த ஆர்ப்பாட்டம் டெல்லியல் உள்ள தலைவர்கள் வரை பேசப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அண்ணாமலை இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
    டெல்லியில் பா.ஜ.க. தலைவர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்து பேசிகிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக பட்ஜெட், உள்ளாட்சி தேர்தல் ஆகியவை குறித்து பா.ஜ.க. தலைவரிடம் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: